எதிர்வரும் வாரத்திலிருந்து யாழ். மாவட்டத்தில் பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் , பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் அரச திணைக்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை அந்தந்த திணைக்களத் தலைவர்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.
எனவே இதுவரை இந்த எரிபொருளுக்கான பங்கீட்டு விநியோக அட்டையை பெற்றுக்கொள்ளாத அரச திணைக்களங்கள் யாழ்ப்பாண மாவட்டச்செயலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

Facebook Conversations