யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
யாழில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட மிகவும் ஆபத்தான பொருள்!
9
views

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் வவுனியா, ஈரப்பெரியகுளம் சோதனை சாவடியில் வழிமறித்து சோதனை செய்தனர்.

இதன் போது குறித்த வாகனத்தில் கஞ்சா மறைத்து கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்த போது பொதி செய்யப்பட்ட நிலையில் 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.

அதனை உடமையில் வைத்திருந்தமை மற்றும் எடுத்துச் சென்றமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர்.

YOUR REACTION?

Facebook Conversations